சொத்துப் பிரச்சினையில் சொந்த அக்காவை கொலை செய்துவிட்டு காவல்துறையில் சரணடைந்த தம்பி
ஆரணியை சேர்ந்த ஜெய்சன்ராஜின் மனைவி எலிசபெத். இவருக்கும் எலிசபெத்தின் தம்பியான சந்தோஷம் என்பவருக்கும் சில வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
தாயின் பென்ஷன் தொகையை மாதம் மாதம் தன்னிடம் கொடுத்து விட வேண்டும் என சந்தோஷம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் எப்போதும் போல் இன்றும் அக்காவின் வீட்டிற்கு சென்று தனக்கு சொத்தை பிரித்து தரும்படி தகராறு செய்துள்ளார். இதனால் அக்கா தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கோபம் கொண்ட சந்தோசம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எலிசபெத்தின் கழுத்தில் குத்தியுள்ளார். பின்னர் தப்பி ஓடியுள்ளார் சந்தோசம். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த எலிசபெத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருந்தும் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்காவை கொலை செய்ததாக கூறி ஆரணி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் சந்தோசம். இதுகுறித்து வழக்குப் பதிந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.