மத்தியபிரதேசம் மாநிலத்தில் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் மனைவியை சித்ரவதை செய்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டார்.
மத்தியபிரதேசம் மாநிலம் தார் பகுதியைச் சேர்ந்தவர் ராமா. 35 வயதான இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தற்போது 6 குழந்தைகள் இருக்கிறது. ராமா கடந்த 2 ஆண்டுகளாகவே தனது மனைவியை கொடூரமாக சித்தரவதை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 6 குழந்தைள் இருக்கின்ற போதிலும், தனது மனைவியை ஒரு பெண் என்று நினைத்து கூட பார்க்காமல், வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு கடும் சித்ரவதை செய்துள்ளார்.
இதற்கிடையே 2 வருடங்களுக்கு முன்பாக நடந்த வாக்கு வாதத்தில், கோபத்தின் உச்சிக்கு சென்ற ராமா, மனைவியின் பிறப்புறுப்பில் பைக்கின் உடைந்து போன ஹேண்டில்பாரை சொருகி சித்தரவதை செய்துள்ளார். ஆனாலும் நினைத்து கூட பார்க்க முடியாத இந்த கொடுமை பற்றி அப்பெண் யாரிடமும் சொல்லவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அப்பெண் மருத்துவமனைக்கு சென்றபோது உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்து, இதற்கு ரூ.1,00,000 வரை செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.
வறுமையில் வாடி வரும் அப்பெண் போதிய பணம் இல்லாத காரணத்தால் சிகிச்சை செய்ய முடியாமல் வீடு திரும்பினார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து பெண்ணின் புகாரை கேட்டு போலீசார் சற்று அதிர்ந்து போயினர். வலியோடு கதறி அழுதபடியே புகார் அளித்த அப்பெண்ணை, போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, போலீசார் உதவியோடு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 4 மணி நேர அறுவை சிகிச்சை நடந்து முடிந்த பின் 6 இஞ்ச் அளவுள்ள பைக்கின் உடைந்த ஹேண்டில்பார் அகற்றப்பட்டு, தற்போது அப்பெண் நலமாக இருக்கிறார். இதனையடுத்து இந்த கொடூரத்தை செய்த கணவரான ராமாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.