Categories
தேசிய செய்திகள்

“ஸ்கூல் பீஸ் கட்டாததால் வெயிலில் நிற்க வைத்த கொடூரம்” கதறி அழும் குழந்தைகள்…. நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வந்துள்ளது. ஆனால் சில மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் மாணவர்களை தேர்வு எழுத விடாமல் ஒரு நாள் முழுக்க வெயிலில் நிற்க வைத்துள்ளது. இதனால் மாணவர்கள் அழுது கொண்டே வெளியே நிற்கின்றனர். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அப்போது ஒரு சிறுமி என்னுடைய தந்தை இன்று கட்டணம் செலுத்தி விடுவதாக என்னிடம் கூறினார். இதை நான் என்னுடைய ஆசிரியரிடம் கூறிய போது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அழுது கொண்டே கூறுகிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், வீடியோவை பகிர்ந்த நபர் நம் நாட்டில் என்றைக்கு கல்வியும் மருத்துவமும் இலவசமாக வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |