கேரள மாநிலத்தில் உள்ள பத்தணம்திட்டா பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியை பாபு (41) என்பவர் கடந்த 2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளிக்கு 142 வருடங்கள் சிறை தண்டனை விதித்ததோடு 5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில் போக்சோ வழக்கில் கைதான ஒரு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக 142 வருடங்கள் வழங்கப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. மேலும் பாபு போக்சோ சட்டம், ஐபிசி பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) போன்றவற்றின் கீழ் தண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.