Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் நடைபெற்ற பணி…. பயங்கர சத்தத்துடன் வெடித்த தோட்டா…. தி.மலையில் பரபரப்பு…!!

கிணற்றில் எதிர்பாராதவிதமாக தோட்டா வெடித்து தொழிலாளர்கள் பலத்த காயமடைந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாவல்பாக்கம் கிராமத்தில் நாராயணன் அய்யர் என்பவர் வசித்து வருகிறார். இவரது நிலத்தில் துணையாங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் சேகர் என்பவர் 3 ஆண்டுகளாக  விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நாராயணன் அய்யர் நிலத்திலுள்ள கிணற்றை ஆழப்படுத்துவதற்காக சேகர் பணிகளை செய்து வந்துள்ளார்.

இதற்காக அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டா  வெடி வைக்கும் வண்டியை வரவழைத்து பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து கிணற்றை ஆழப்படுத்துவதற்காக கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேரும் கிணற்றில் இறங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். அதன் பிறகு கிணற்றிலிருந்த பாறையை உடைப்பதற்காக தோட்டா வெடி வைக்கப்பட்டுள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக தோட்டா வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 4  பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிந்து குமார் மற்றும் சேகரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |