பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த ராணி ஒருவர் செய்த கொடூர செயல் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்காவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த அங்கோலாவின் ராணி என்ஜிங்கா எம்பாண்டி கொடூரமான ஆட்சி புரிந்து வந்துள்ளார். மேலும் அவர் உடலுறவு கொண்ட தனது காதலரை துடிக்கத் துடிக்க உயிருடன் எரித்துக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த ராணி தென் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாதம்பா மற்றும் தொங்கோவில் ராணியாக ஆட்சி புரிந்தார் என்று பல புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த காலகட்டத்தில் அரண்மனைகளில் வசித்து வருபவர்களில் இரண்டு ஆண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சண்டையில் மோதிக் கொள்பவர்களில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர் அந்த ராணியுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ராணியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் அந்த நபர் எரித்து கொலை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அந்த ராணி பல ஆண்களை கொடூரமாக கொலை செய்துள்ளார் என்று புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எதற்காக இவ்வாறு கொடூர செயலில் ஈடுபட்டார் என்பதற்கான காரணம் எதுவும் தெளிவாக தெரியவில்லை.