சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பாண்டியன் என்பவர் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது வண்டிப்பாளையம் பகுதியில் சென்ற நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக பாண்டியனின் கார் மீது மோதியுள்ளது.
இதில் செயல்பாட்டை இழந்த கார் சாலையிலிருந்த தடுப்பு கட்டையின் மேல் மோதி நின்றுள்ளது. இவ்விபத்தில் பாண்டியன் காயமடைந்துள்ளார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பாண்டியனுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.