Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேசாம பஸ்ல போயிருக்கலாம்… மயிரிழையில் உயிர் தப்பிய நபர்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

தேனி மாவட்டத்தில் தந்தையில் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு வனப்பகுதியில் சென்றவரை கரடி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியபுரத்தில் செல்வம் என்பவரது தந்தை வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் விருதுநகரில் பணிபுரிந்து வந்த செல்வம் தந்தையின் இறுதி சாதனத்தில் பங்கேற்பதற்காக தேனிக்கு வந்து இறுதி சடங்கினை முடித்துள்ளார். இதனையடுத்து நேற்று மீண்டும் விருதுநகருக்கு புறப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் பேருந்தில் செல்லாமல் காமராஜபுரத்தில் இருந்து கிழவன் கோவிலுக்கு அப்பகுதியில் உள்ள காடு வழியாக சென்றுள்ளார்.

அப்போது வனப்பகுதியில் இருந்த கரடி ஓன்று செல்வத்தை தாக்கியுள்ளது. மேலும் பதறிய செல்வம் அங்கேயே பயத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு அப்பகுதியாக வந்தவர்கள் செல்வத்தை மீட்டு தேனி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

Categories

Tech |