Categories
தேசிய செய்திகள்

பொலிவிழக்கும் தாஜ்மஹால்……. காப்பாத்துங்க….. காப்பாத்துங்க….. கவலை தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள்…!!

காற்று மாசு இல் இருந்து தாஜ்மஹாலை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் மிகப்பெரும் அடையாளமான தாஜ்மஹால் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மஹால்முழுக்க முழுக்க வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. தற்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக தனது இயல்பான நிறத்தை விடுத்து மஞ்சள் நிறத்தில் மாறி வருகிறது.

Related image

இந்நிலையில் கடந்த சில தினங்களாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. இதையடுத்து மரங்களை தூய்மைப்படுத்தும் பணியில் தண்ணீர் கொண்டு மரங்களை சுத்தப் படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் தாஜ்மஹால் மேலும் பொலிவை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |