திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கு வருகின்ற 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
நாங்குநேரி தொகுதியில், திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வருகின்ற இடைதேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.