கனேடிய அரசு கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் ஏழை நாடுகளுக்கு உதவ ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனேடிய பெடரல் அரசாங்கம் ஏழை நாடுகளுக்கு சுமார் 17.7 மில்லியன் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் உலக நாடுகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக கனேடிய மக்களிடம் நிதி திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் கனடாவில் உபரியாக இருக்கும் COVID-19 தடுப்பூசிகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் “கோவாக்ஸ்” திட்டம் மூலம் இந்த தடுப்பூசி அளவுகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசி வழங்குவதற்கான நேரமானது விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே 51 மில்லியன் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் மற்றும் 44 மில்லியன் மாடர்னா தடுப்பூசிகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் இறக்குமதியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ஜூலை மாத இறுதிக்குள் 68 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவிற்கு வந்து சேரும் என்று கூறப்படுகிறது.