Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இலவச மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை – வானதி சீனிவாசன்..!!

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை என  வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

திருப்பூர் காங்கேயம் சாலையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பிற கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதன் பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை. தமிழகத்தில் 21 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்தால் பயனடைந்து வருகின்றனர்.. மத்திய அரசு விவசாயிகளுக்காக எவ்வளவு மின்சாரம் செலவிடப்படுகிறது என்ற விவரத்தை மட்டுமே கேட்டுள்ளது. மின்வாரியத்தில் 1,13,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மின் விநியோக நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய 90,000 கோடி ரூபாயை மாநில அரசு கேட்டதற்கிணங்க மத்திய அரசு கொடுத்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரி செய்வதற்கு என்ன திட்டம் உள்ளது என்பது குறித்தே ஆலோசிக்கப்படுகின்றது. விவசாயிகளுக்கான அரசாகவே மத்திய அரசு இருக்கிறது.

மேலும் பிரதமர் மோடியின் சுயசார்பு பாரதம் என்ற திட்டம் குறித்து வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அதற்காக காணொலி வாயிலாக மின்னணு பேரணிகளையும் நடத்த உள்ளோம். வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். வடமாநிலங்களிலிருந்து திரும்பும் தமிழர்களை திருப்பூர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாஸ்க் மற்றும் முழு உடல் கவசங்கள் தயாரிப்பில் திருப்பூர் முன்னிலை வகிக்கின்றது” என்றார்.

Categories

Tech |