விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கி கார் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மினசோட்டாவின் ஆர்டன் ஹில்ஸில் நெடுஞ்சாலையில் அவசரமாக தரை இறங்ககிய சிறிய ரக விமானம் ஒன்று முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதிலுள்ள விமானி கிரேக் கிப்போர்ட் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தின் போது விமானத்தில் 2 பேர் இருந்ததாக மத்திய விமான போக்குவரத்து ஆணையம் தகவல்கள் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து விமானத்தை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டதால் நெடுஞ்சாலைப் பல மணி நேரம் மூடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து FAA மற்றும் தேசிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. இரவு 9.30 மணி அளவில் நடந்துள்ள இந்த விபத்தானது நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த போக்குவரத்து துறையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரை இறங்கி கார் மீது மோதி விபத்துக்குள்ளாகி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/i/status/1334582082719322113