OPS , EPS-க்கு எதிராக முன்னாள் MP கேசி பழனிசாமி தொடர்ந்து வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகளில் இருந்து கொண்டு அதிமுக_வின் form a , b ஆகிய முக்கிய படிவங்களில் கையெழுத்திட தடை விதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று முன்னாள் M.P கேசி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது அதிமுக விதிகளுக்கு புறம்பானது என்று தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது . இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்பு அதிமுகவின் FORM-A , FORM-B_யில் OPS , EPS கையெழுத்திடுவதை தடை செய்ய முடியாது . அதற்க்கு எந்தவிதமான காரணமும் இல்லை என்று கூறி இடைக்காலமாக தடை விதிக்க முடியாது என்று கூறி உத்தரவிட்டார்.