கிராமசபை ரத்து செய்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட திமுகவின் மூத்த தலைவர் கே.என் நேரு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளின் கூட்டத்தை சமாளிக்க இயலும் போது கிராமசபை கூட்டங்களை நடத்த இயலாதா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று கூற அரசுக்கு அதிகாரம் எங்கே உள்ளது ? தனிமனித இடைவெளி காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து என்றால் டாஸ்மார்க்கில் அது பின்பற்றப்படுகிறதா ? என்று அடுக்கடுக்காக கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருக்கின்றார்கள். மேலும் ஜனவரி 22ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.