நீதி மன்ற விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டிருந்த சந்தோஷ்குமார் மீதான குற்றம் நிரூபிக்கபட்டது. மேலும் அவர் தான் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரங்களை இன்று பிற்பகல் 3 மணிஅளவில் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறி இருந்த நிலையில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு 302 பிரிவின் கீழ் கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது .அதுமட்டுமல்லாமல் சந்தோஷ் குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக டிஎன்ஏ சோதனையில் மற்றொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக கோவை நீதிமன்றத்தில் தாய் மனு கொடுத்திருந்தார். சிறுமியின் தாய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மற்றொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் அவரையும் கைது செய்ய கோரிக்கை நீதிமன்றத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.