Categories
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு உடனே…. “30.6 டி.எம்.சி காவிரி நீர் திறங்க”… கர்நாடகாவுக்கு ஆணை..!!

தமிழகத்திற்கு தரவேண்டிய 30.6 டிஎம்சி காவிரி நீரை வழங்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. மேகதாது அணை கட்டுவது, காவிரி நீர் திறந்து விடுவது தொடர்பாக இரு மாநில அரசுகளுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.. இந்த பிரச்னையை தீர்க்கவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது..

இந்நிலையில் இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது ஆலோசனை கூட்டம் மத்திய நீர்வள ஆணையர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லி சேவா பவனில் நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உட்பட  4 மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனையில், தமிழகத்திற்கு தரவேண்டிய 30.6 டிஎம்சி காவிரி நீரை வழங்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கு தரவேண்டிய 30.6 டிஎம்சி நிலுவையை உடனே வழங்க வேண்டும் என்றும்,
செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை காவிரியில் உடனே திறந்து விடவும்  கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |