Categories
சினிமா தமிழ் சினிமா

“ரசிகர்கள் முன்னிலையில் தளபதியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்”…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் வாரிசு படத்திலிருந்து ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் வாரிசு படத்தில் நடித்த பல்வேறு பிரபலங்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் கலந்து கொண்டு மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ரசிகர்கள் சார்பில் நடிகர் சதீஷ் கீழே இறங்கி வந்து நடிகர் விஜயை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார். மேலும் இது தொடர்பான வீடியோவை நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@actorsathish)

 

Categories

Tech |