‘கண்ணான கண்ணே’ சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”கண்ணான கண்ணே”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முக்கிய சாதனை படைத்து வருகிறது.
இதனையடுத்து, இந்த சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, யமுனா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நித்யா தாஸ் இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், அவருக்கு பதில் புதிதாக நடிக்க வருவது யார் என்ற தகவல் தெரியவில்லை என கூறப்படுகிறது.