செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, சம்பவம் நடந்த மறுநாளே முதல்வர் காவல்துறை அதிகாரிகளை நேரடியாக போக சொல்கிறார். நேர போறாங்க… ரீவ்வியூ மீட்டிங் நடக்குது, வழக்கின் தன்மையையடுத்து பன்னாட்டு பயங்கரவாத அமைப்பு தொடர்புடையது இருக்குமா ? என்கின்ற எண்ணத்தில், ஆதாரங்களின் அடிப்படையில் NIAவிடம் ஒப்படைக்கப்படுகிறது.
மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு, வழக்கு நடத்துகிறார்கள். ஒப்படைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆச்சு ? ஏன் இந்தியாவுடைய பிரதமர் அமைச்சர் பிரதமர் மோடி இன்னும் அதை பத்தி பேசவில்லை என்றால் எவ்வளவு எப்படி இருக்கும் ? அப்படி பால்வாடித்தனமான அரசியலைத்தான் அண்ணாமலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். அண்ணாமலைக்கு தன்னுடைய அரசியலை தக்க வைக்க வேறு எதுவுமே தெரியாததால், மிகவும் இக்கட்டான ஒரு அசாதாரண சூழலில் கூட தன்னுடைய பிழைப்புக்காக அரசியல் நடத்துகிறார் என்பதை நாங்கள் குற்றச்சாட்டு வைக்கிறோம்.
அண்ணாமலை 10 பக்க அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். Whatsapp வாந்தி என்பார்கள். அந்த வதந்திகளை கொண்டு வந்து சொல்றாரு. ஏற்கனவே அவர் வச்ச குற்றச்சாட்டு முபின் பெயரை குறிப்பிட்டு ஒன்றிய அரசு, மாநில காவல்துறைக்கு இவர் பயங்கரவாதி, இவரை கண்காணிங்கள் என்று கடிதம் அனுப்பியதாக சொன்னார்கள். அதற்கு எந்த ஆதாரத்தையும் சொல்லல. இதுவரைக்கும் தமிழ்நாடு அரசுக்கு அப்படி ஒரு கடிதம் வரவில்லை. ஒன்றிய அரசு மாநில அரசிடம் அப்படி ஒரு தகவலை சொல்லவே இல்லை சொல்லவில்லை என தெரிவித்தார்.