அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயமானது ஜனவரிமாதம் 20ம் தேதி அன்று இந்தியா வந்தடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடெங்கும் பருவமழை பெய்த காரணத்தால் வெங்காய சாகுபடியின் விளைச்சல் முழுவதும் பாதித்தது . இதனால் வெங்காயத்தின் விலையானது அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது .இதைத்தொடர்ந்து , மத்திய அரசு தன்வசம் வைத்திருந்த வெங்காயத்தை உள்நாட்டு சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது.
விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக , அயல் நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது மத்திய அரசு .பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற வெங்காயமானது ஜனவரி மாதம் 20ம் தேதி இந்தியாவை வந்து சேரும் என்று மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது .