Categories
தேசிய செய்திகள்

“வெங்காய ஏற்றுமதிக்கு தடை”… மத்திய அரசு அதிரடி.!!

உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெரிதும் சவாலாக இருப்பது வெங்காயம் தான். குறிப்பாக இந்திய உணவு கலாச்சாரத்தின் வெங்காயம் இல்லாமல் சமைக்கக் கூடிய உணவுகள் என்பது மிக மிக குறைவு. எனவே இந்திய மக்களின் உணவில் அதிகப்படியாக வெங்காயம் இருந்து வருகிறது. ஆனால் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியாக பெய்த மழை காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.வழக்கத்திற்கு மாறாக பலமடங்கு உயர்ந்துள்ளதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Image result for வெங்காயம்

இந்நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை வெங்காய ஏற்றுமதிக்கு  மத்திய அரசு தடை விதித்தது. உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிகப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசு அந்த அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளது.

 

Categories

Tech |