ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், 4 , 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய ஒன்றியத்தின் வரைபடத்தினுடைய எல்லையை தாண்டி இருந்த இடத்திலேயும் தமிழன் உடைய கலாச்சாரம் இருந்திருக்கு. அந்த வீர விளையாட்டிற்கான காளை இருந்திருக்கு. அப்படிப்பட்ட விளையாட்டை நீங்கள் தடுத்து, அதை இல்லாமல் இருக்க நீங்கள் முயற்சி செய்தபோது, இந்த மண்ணில் எப்படிப்பட்ட புரட்சி வெடித்தது என்பது உங்கள் மனதை விட்டு இன்றும் அகலாமல் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.
இங்கு இருக்கும் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ராணுவமே வந்தாலும், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும், அந்த உரிமையை மீட்காமல் நாங்கள் திரும்ப மாட்டோம் என்று மதுரை அவனியாபுரம் வாடிவாசலில் எங்கள் புரட்சியை தொடங்கினோம். நீங்கள் சாதாரண தொப்பியை கழட்டிவிட்டு, இரும்பு தொப்பியை போடும் போது, நாங்கள் பின்வாங்கவில்லை, சீறி நின்னோம்.
நீங்கள் அடிச்ச அடியில் தெறித்த ரத்தத்தில் அவனியாபுரத்தில் இருந்து அமெரிக்கா வரைக்கும் ஒட்டுமொத்த தமிழினமும் நெருப்பாக எழுந்து நின்று போராடினோம். அந்த தகிப்பை உங்களால் தாங்க முடியவில்லை. வேற வழியே இல்லாமல் இருந்தீங்க.,.
ஜல்லிக்கட்டு விளையாட கூடாது என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு. இந்திய ஒன்றிய அரசு கைவிரித்து இனி ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக்காது என்று கொக்கரித்தது, அதெல்லாம் வரலாறு. கடைசியில் எங்க போராட்டத்திற்கு அடிபணிந்து தலைகுனிச்சி இந்த சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீங்கள் நிறைவேற்றலாம் என்று வேறு வழி இல்லாமல் நீங்கள் அடிபணிந்தீரகள் என ஆவேசமாக பேசினார்.