தபால் துறையில் இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
இந்தியா முழுவதும் உள்ள தபால் துறைக்கான பல்வேறு காலியான பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்புவது வழக்கம். இத்தேர்வுகளில் இந்தி,ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் வினாத்தாள் இருக்கும். மாநில மொழிகளில் கொடுக்கப்பட்டிருப்பதால் போட்டி தேர்வு எழுதுபவர்கள் எளிதில் புரிந்து கொண்டு பதிலளிக்க ஏதுவாக இருக்கும். இதுவே நடைமுறைப்டுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.