கொரோனா பாதிப்பு காரணமாக சிறு குறு, நடுத்தர தொழில்கள் பாதிப்படைந்துள்ளதால் அவகாசம் தர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகின்றது.
சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 32 பேர் வெளிநாட்டினர் ஆவர்.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடல் மற்றும் பொதுமக்கள் ஓன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. இருப்பினும் கொரோனவை கட்டுப்படுத்துவதற்கு அரசு இது போன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் கொரோனா எதிரொலியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிறு குறு, நடுத்தர தொழில்கள் பாதிப்படைந்துள்ளதால் அவகாசம் தர அரசு பரிசீலனை செய்து வருகின்றது. அதாவது, சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக்கடனை திரும்ப செலுத்த அவகாசம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகின்றது.