Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சொல்லிய மத்திய அரசு…! ”மீறிய தமிழக அரசு” செம மகிழ்ச்சியில் மக்கள் ….!!

ஊரடங்கில் மத்திய அரசு அனுமதித்த அதே தளர்வுகளுடன் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. முதலமைச்சரின் அறிக்கையாக இது வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதே நேரத்தில் நேற்று மத்திய அரசு கொடுத்த சில தளர்வுகள் பின்பற்றப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.மேலும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும்.

அதே போல ஊரக, நகர்ப்புற பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை. கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். நகராட்சி, மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்களை தவிர்த்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம்.

tasmac: Latest News & Videos, Photos about tasmac | The Economic Times

சென்னையை தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி. அதே போல மதுக்கூடங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விதித்துள்ள தளர்வுகளை தமிழக அரசும் அனுமதித்தாலும் மதுக்கடைகள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுக்கடைகள் இயங்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |