Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

மத்திய அரசு சொல்லுற கேட்கல…..! ”தமிழக அரசுக்கு எதிராக வழக்கு” ஷாக் ஆன எடப்பாடி ..!!

10 வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு ஏற்கனவே தள்ளி வையகப்பட்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அதனுடைய தலைவர் பக்தவச்சலம் சென்னை  உச்சநீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் பள்ளி கல்லூரி போன்ற நிறுவனங்களை திறப்பது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்து ஆலோசித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்கலாமல் ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. 9 லட்சத்து 79 ஆயிரம் 10-ஆம் வகுப்பு மாணவர்களும் 8 லட்சத்து 41 ஆயிரம் 11ஆம் வகுப்பு மாணவர்களும், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத 36 ஆயிரத்து 089 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளதாகவும், இந்த தேர்வு பணிக்கு 3 லட்சத்து 87 ஆயிரத்து 623 ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என 22 லட்சத்து 43 ஆயிரம் பேர் தேர்வு பணியில் ஈடுபட உள்ளதாகவும்,

இத்தனை பேரின் ஆரோக்கியம் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு மாநிலம் முழுவதும் 12690 தேர்வு மையங்களிலும், பதினொன்றாம் வகுப்புக்காக 7,400 தேர்வு மையங்களும் உள்ளதால் எத்தனை சுகாதாரப்பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அரசு தெரிவிக்கவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த தேர்வை மேலும் இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Categories

Tech |