தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
மத்தியக்கிழக்கு வங்கக்கடல், ஆந்திர, கர்நாடக, கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆந்திரா கடலோர பகுதி, லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதி, மத்திய கிழக்கு வங்கக்கடலில் சூறாவளி காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடலோர பகுதிகளில் ஜூன் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.