Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப்பை பஞ்சாக பறக்க விட்ட சென்னை….. சொந்த மண்ணில் மீண்டும் வெற்றி …..!!

சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ளது. 

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடியது.   இப்போட்டியில்  டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாப் டு பிலெசிஸ் 54 (38) ரன்களும், கேப்டன் தோனி 37 (23) ரன்களும், விளாசினர். மேலும் சேன் வாட்சன் 26, ராயுடு 21, ரெய்னா 17 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சர்பராஸ் கான் 67 (59) ரன்களும், கே.எல் ராகுல் 55 (47) ரன்களும் எடுத்தனர். மேலும் டேவிட் மில்லர் 6, கிறிஸ் கெய்ல் 5, ரன்களும் எடுத்தனர். மன்தீப் சிங் 1* ரன்னிலும், சாம் கர்ரன் 0* ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணியில் ஹர்பஜன் சிங்,  ஸ்காட் கஜ்ஜலின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தீபக் சாஹர்  1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

 

Categories

Tech |