சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 160 ரன்கள் குவித்துள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகின்றன இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக பாப் டு பிலெசிஸ் 54 (38) ரன்களும், கேப்டன் தோனி 37 (23) ரன்களும், விளாசினர். மேலும் சேன் வாட்சன் 26, ராயுடு 21, ரெய்னா 17 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதன் பின் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 56 ரன்களுடன் விளையாடி வருகிறது.