கொரோனா பாதிப்பில் அனைத்து பகுதிகளும் பச்சை மண்டலமாக மாற்றப்பட வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு என்பதே மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், வேளாண் பணிகளை யாரும் தடுக்கக்கூடாது, வேளாண் பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த தடையும் செய்யக்கூடாது. காய்கறி கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக பயன்படுத்த பின்பற்றப்படவில்லை.
காவல்துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதியை முழுமையாக கண்காணிக்க வேண்டும். அனாவசியமாக வெளியே வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அது மிக மிக முக்கியம். மாநில எல்லையில் காவல் துறை அதிகாரிகள் கவனமாக ஈடுபட்டு, முழுமையாக பரிசோதனை செய்யப்படவேண்டும். அனுமதி சீட்டு இருந்தால் அவர்களை அனுமதிக்கலாம்.
சிவப்பு பகுதியிலிருந்து ஆரஞ்சு பகுதியாக மாற்ற வேண்டும். ஆரஞ்சு பகுதியில் இருந்து பச்சை பகுதியாக மாற வேண்டும். அப்படி படிப்படியாக மாற்றினால்தான் இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும். அப்படி வந்தால்தான் தொழிற்சாலை நடத்த முடியும். மக்கள் இயல்பாக தங்களுடைய பணியை மேற்கொள்ள முடியும். அதற்கு தான் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களுடைய பணிகளை மேற்கொண்டு இருக்கிறீர்கள். இருந்தாலும் மேலும் இந்த நோய் பரவாமல் தடுத்து இயல்பு நிலைக்கு வரவேண்டும். கொரோனாவை கட்டுப்படுத நடவடிக்கை எடுத்து வரும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டுக்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.