Categories
மாநில செய்திகள்

கொரோனாவுக்குச் சரியான சிகிச்சை அளிப்பதில்லை என்ற சர்ச்சை… ஸ்டான்லி மருத்துவமனை டீன் முற்றுப்புள்ளி!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மருத்துவமனையின் முதல்வர் சாந்தி மலர் மறுத்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அங்கு படித்து வரும் சில மாணவர்களால், சில தினங்களாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வர் சாந்தி மலர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களிடையே பேசிய அவர், ‘கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்துள்ளோம். தொற்று அல்லாத அறை ஒதுக்கப்பட்டு, கொரோனா வைரஸ் அறிகுறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் தொற்று நோய் சிகிச்சை குறித்து மக்களிடையே ஒரு பயம் உள்ளது.

அதனால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் சுத்தமாக உபயோகப்படுத்தி வருகிறோம். நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொண்டு வருகிறோம். ஒரு நாளைக்கு 10-15 முறை கைகளை நன்கு கழுவ வேண்டும்.பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்’ எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சீனாவில் பயின்று வரும் இந்திய மாணவிகள் 2 பேருக்குச் சளி, இருமல் இருந்ததால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் வந்த பிறகு தான், அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள்.

மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் அளிக்கப்படுகிறது. சில மருத்துவ மாணவர்கள் பயந்து போதிய பாதுகாப்பு இல்லை என்று தவறான கருத்தை பரப்பி உள்ளார்கள். அனைத்து வார்டுகளிலும் தொற்று ஏற்படாமல் இருக்க ஸ்பிரே அடிக்கப்படுகிறது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பிற்காக n95 மாஸ்க், காலுறை வழங்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |