அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவில் அவரது சிலைக்கு முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
சென்னையில் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அமைச்சர்கள் அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகளும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில் அதிமுக கட்சிக் கொடிகள் மற்றும் பேனர், கட் அவுட் எதுவும் வைக்கப்படவில்லை. சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்ததால் கொடிகள், பேனர்கள் வேண்டாம் என முன்னதாக முதல்வர் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.