கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி– செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் 5 நாட்களாகியும் இளமதி எங்கே இருக்கிறார் ? என்று இன்னும் கண்டுபிடிக்காத நிலை ஏற்பட்டதையடுத்து பாராளுமன்றத்தில் தர்மபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் குரல் எழுப்பினார். இதனை தொடர்ந்து ட்வீட்டரில் #இளமதி_எங்கே என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகியது.
இந்நிலையில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கறிஞ்சர் சரவணனுடன் ஆஜராகிய இளமதி தனது பெற்றோருடன் செல்வதாக தெரிவித்துள்ளார். கொளத்தூர் மணி , காதலன் செல்வன் , திவிக நிர்வாகிகள் ஈஸ்வரன் , சரவணன் ஆகிய 4 பேர் மீது பவானி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சேர்ந்த `செல்வன் – இளமதி’ தம்பதியைப் பிரித்த அ.தி.மு.க அமைச்சர் யார் என்று அடையாளம் கண்டுபிடித்து அவரை அந்த பொறுப்பிலிருந்து முதல்வர் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது மாதிரியான ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.