Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் சொல்லுறது ”ஜோக்” ஆக இருக்குது – கலாய்த்த முக.ஸ்டாலின் ….!!

தமிழக முதலமைச்சர் கூறியது ஜோக்காக இருக்கின்றது என்று முக.ஸ்டாலின் கலாய்த்துள்ளார்.

ஏப்ரல் 24 தனக்கு ஏதோ தெரியும் என்பது போல சென்னைக்கும், நான்கு நகரங்களுக்கும் ஊரடங்கிற்க்குள் நான்கு நாட்கள் ஊரடங்கை திடீரென அறிவித்தார் முதலமைச்சர். குடிநீர் உட்பட அத்தியாவசிய தேவைகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களிடையே உண்டான பதற்றத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட் உட்பட பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த பொறுப்பில்லாத ஊரடங்கு முடிவானது தினமும் 50க்கு குறைவாக இருந்த கொரோனா நோய் பாதிப்பை ஒரு வாரத்தில் தினமும் 250 ஆக உயர்த்தி மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றை பன்மடங்கு பெருகியது.

அரசின் முடிவு வேதனை:

ஏப்ரல் 27 எல்லாவற்றிற்கும் மேலாக பரிசோதனை கருவிகளின் தரமே கேள்விக்குறியாக இருந்தது. ஐசிஎம்ஆர் அங்கீகாரம் பெற முடியாத நிலையில் 24 ஆயிரம் பரிசோதனை கருவிகளின் தரம் பற்றி நாம் கேள்வி எழுப்பியதும் அவற்றை திருப்பி அனுப்பினர். இன்றைக்கு 3 மடங்காக பரிசோதனை அதிகரித்தும் நோய் தொற்றை கட்டுப்படுத்த இயலவில்லை. மே 7 நோய்தொற்று எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து கொண்டிருந்தபோது டாஸ்மார்க் கடைகளை திறக்கும் அரசின் முடிவானது மிகவும் வேதனையான முடிவாக அமைந்தது. தாய்மார்களின் கோரிக்கைகளை ஏற்காமல் டாஸ்மார்க் கடைகளை திறந்தனர். சமூக இடைவெளி அங்கும் கடைபிடிக்கவில்லை.

கொரோனாவின் கேந்திரம்:

24 மணி நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றமே தலையிட்டு கடைகளை மூட உத்தரவிட்டனர். லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் டாஸ்மார்க் திறக்க வேண்டும் என்று அவசர அவசரமாக அரசு முடிவெடுத்தது. மே10-இல் கோயம்பேடு கொரோனா தொற்றின் கேந்திரமாக மாறியது. அகில இந்திய அளவில் தலைப்புச் செய்தியாக மாறியது. மாநிலம் முழுவதும் தினமும் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட காரணமாக அமைந்தது. கோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டதால் நோய் தொற்று அதிகரித்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து கோயம்பேட்டில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க படவில்லை என்பதற்கான படங்கள் பத்திரிக்கைகளில், தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வெளியானது.

95% தமிழக்த்திற்கு கொரோனா:

கொரோனா பணக்காரர்களின் வியாதி என்றும், வெளிநாட்டிற்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்று திரும்புபவர்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறி இந்த நோயை பற்றிய எந்த புரிதலும் இல்லாதவராக இருந்தார். இன்று அரசின் தகவலின்படி 95 சதவிகித கொரோனா நோய்த்தொற்று தமிழகத்துக்கு உள்ளே உருவானது. வெளிநாட்டிலிருந்தோ, வெளிமாநிலத்தில் இருந்தோ இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை பார்க்கும் போது முதல் அமைச்சர் கூறியது ஜோக்காக இருக்கின்றது என்று முக.ஸ்டாலின் விமர்சித்தார்.

Categories

Tech |