உலக மகளிர் தினத்தன்று கேரளாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
1975 முதல் ஆண்டு தோறும் உலக மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் மகளிர் தின சிறப்பு நாளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு வழங்குவதற்கு கேரளக் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அம்மாநிலத்தில் இருக்கும் அனைத்துக் காவல்நிலையங்களிலும் நாளை ஒருநாள் மட்டும் பெண்களிடம் தலைமைப் பொறுப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்குக் காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP )லோகநாத் பெகரா (Lokanath Behera) அறிவுறுத்தியுள்ளார்.