Categories
உலக செய்திகள்

“ஊரடங்கு ரொம்ப போர்” பொம்மையுடன் கல்யாணமாகி குழந்தை…. இது தான் காரணம்…!!

இளம்பெண் ஒருவர் ஊரடங்கு போரடித்ததால் பொம்மையை திருமணம் செய்துள்ள சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியை சேர்ந்த நடிகை chethrin(28). இவருக்கு ஊரடங்கு போர் அடித்ததால் ஒரு  பொம்மையை திருமணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும், அந்த பொம்மை குழந்தைக்கு hanneore என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தன் குழந்தையை அடிக்கடி தனது சமூக ஊடகத்தில் காட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும் கேமராவின் கண்களுக்கு முன்னால் என்னுடைய குழந்தையை வளர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு காரணம் அவள் வளர்ந்த பிறகு தன்னுடைய சமூக ஊடக கணக்கை தொடர வேண்டும் என்று chethrin தெரிவித்துள்ளார். இது வேடிக்கையாக இருக்கிறது அல்லவா?ஆனால் இந்த செயலுக்குப் பின்னால் ஒரு விஷயம் இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது சினிமா பிரபலங்கள் சிலர் தங்களுடைய பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து நொடிக்கு ஒரு முறை இணையத்தில் பகிர்ந்து கொள்வதை கேலி செய்யத்தான் அவர் இப்படி செய்துள்ளார் என நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |