Categories
உலக செய்திகள் வைரல்

முடி வெட்ட மறுக்கும் குழந்தை…. ரியாக்சனை பாருங்களேன்…. வைரல் வீடியோ 2.0…!!

முடி வெட்டும்போது வெவ்வேறு விதமாக ரியாக்சன் காட்டும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக முடி கொட்டாமல் நீண்ட முடியுடன் சலூனில் முடி வெட்டும் சிறுவனின் வீடியோ கடந்த வருடம் வைரலாக பரவியது. அனுஷ்ருத் என்ற அந்த சிறுவனையும், அவரது அப்பா அனுப்பையும் ஒரே நாளில் பிரபலம் ஆக்கியது அந்த வீடியோ. அந்த வீடியோவில் அவன் காட்டி அப்பாவித்தனம் முடி வெட்டுதல் மீது அவர் காட்டிய கோபம் அடக்க முடியாமல் போய்விட்ட அழுகை என பலரும் அந்த சிறுவன் வைத்து மீம்ஸ்கள் போட்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த சிறுவன் முடிவெட்டும் இரண்டாவது வீடியோ அவருடைய அப்பா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிறுவன் ஒரு நாற்காலியில் வெள்ளை நீல நிறத் துணி போர்த்தி கொண்டு உட்கார்ந்து இருக்கிறான். அவனிடம் உனக்கு முடிவெட்ட ஏன் பிடிக்கவில்லை? என்று அப்பாவின் கேள்விக்கு நீங்கள் மோசமானவர் என்று முடிவெட்டுபவரை பார்த்து கூறுகிறார். பல்வேறு ரியாக்சன் காட்டும் அந்த சிறுவனின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

Categories

Tech |