Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சாமி கும்பிட்டு வாரோம்” கோவிலுக்கு சென்ற குழந்தைகள்…. பின்னர் நடந்த துயரம்…!!

குழந்தைகள் இருவர் கோவிலுக்கு சென்றபோது குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் வசிப்பவர் முத்து. இவர் மகள் கீர்த்தனா ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் அதே பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரின் மகள் மகாலட்சுமி. இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் அதில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து வெகுநேரமாகியும் குழந்தைகள் இருவரும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவர்களின் பெற்றோர் பல இடங்களில் தேடி அடைந்துள்ளனர். இதையடுத்து இருவரும் கோவில் குளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர்  சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்ற போது குழந்தைகள் இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தைஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |