போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ் பெறப்படும் என ஹாங்காங் அறிவித்தது.
கடந்த 3 மாதங்களாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அரசு அழைத்து செல்லும் திட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான். ஆகவே அரசின் முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது.
மேலும் ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரிலாம் பதவி விலககோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். முன்பு வாரத்தின் இறுதியில் மட்டும் நடந்த போராட்டங்கள் வார நாட்கள் முழுவதும் நடைபெற்றதால் அடிக்கடி போராட்ட காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முடிவில் உறுதியாக இருந்ததால் சீன ராணுவமும், ஹாங்காங் போலீசாரும் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும், அமைதியை ஏற்படுத்தவும் கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ் பெறப்படும் என ஹாங்காங் அறிவித்தது.