கடன் செயலி மூலம் மக்களிடம் 300 கோடி அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேங்கைவாசலை சேர்ந்த கணேசன் கடன் செயலிமூலம் பணம் பெற்ற நிலையில், அதனைத் திரும்பச் செலுத்துமாறு தொடர்ச்சியாக மிரட்டல் வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கந்துவட்டி தடுப்பு பிரிவு மற்றும் சைபர் குற்றப்பிரிவு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கால் சென்டர் நடத்தி வந்த பிரமோத், பவான் ஆகிய இருவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்களின் பின் இருந்தது சீனாவைச் சேர்ந்த ஜியா யமோ, வூ யுவன்லன் ஆகியோர் செயல்படுவது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து போலீசார் இரு சீனர்களையும் கடந்த 2-ஆம் தேதி கைது செய்தனர். விசாரணையில் இந்தக் கும்பல் 25 பேரிடம் ரூபாய் 300 கோடிவரை அபகரித்திருப்பது தெரியவந்தது.
சீனர்கள் ஒரு ஆண்டில் இந்தச் செயலிமூலம் ரூபாய் 300 கோடிவரை அபகரித்து இருப்பதும், அந்தப் பணத்தை இந்தியாவிலேயே சட்டவிரோதமாக ரியல் எஸ்டேட் கட்டுமானத் துறையில் முதலீடு செய்திருப்பதும், பெரும் பகுதி பணம் சீனாவுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட இருப்பதும் தெரியவந்தது. இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்த நிலையில் இரு சீனர்கள் இடமும் விசாரிக்கத் தில்லியில் அதிகாரிகள் புதன்கிழமை வந்தனர்.