Categories
அரசியல் மாநில செய்திகள்

தேவாலயம், சர்ச்சுல மாத்திட்டாங்க…! முருகன் மீது சத்தியம்… இங்கேயும் மாற்றுவோம் – சீமான் உறுதி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என நாங்கள் சொல்கின்றோம். நீங்கள் உடனே பள்ளி வாசலில் போய் கேட்பீர்களா? தேவாலயத்தில் போய் கேட்பீர்களா? என்று கேட்பார்கள்.நான் கேட்பதை சொல்லுங்கள். அது என் சமயமா ? அது ஐரோப்பிய மதம், இன்னொன்று அரேபிய மதம். இது என் சமயம், சைவம் என் இறை. என் இறைக்கு என் மொழியில் வழிபாடு நடத்துங்க.

அப்படியே பார்த்தாலும் இன்று இருக்கின்ற தேவாலயங்களில், சர்ச்சுகளையும் தூய தமிழில் வழிபாடு நடக்கிறது. பரலோகத்தில் இருக்கின்ற எனது பிதாவே கூட கிடையாது, விண்ணுலகில் இருக்கும் என் தந்தையே என்று வருகிறது, பிதா, சுதன், பரிசுத்த ஆவியும் கிடையாது தந்தை, மகன், தூய ஆவி என்கிறார்கள். என் இறைக்கு முன்னால் என் கோவிலில் ஏன் என் மொழியில் வழிபாடு இல்லை.

வானொலியை தவிர வேறு எல்லாமே தமிழில் தான் பள்ளிவாசலில் சொல்லப்படுகிறது. திருமண நிகழ்வுகளில் நானே முன்னேறு நடத்தே திருமணங்கள் எத்தனையோ இருக்கிறது, நான் கையெழுத்திட்டு, சான்று கையெழுத்திட்ட திருமணங்கள் எவ்வளவு இருக்கிறது, என் உறவினர்கள் திருமணம். அதில் அவர்கள் தமிழில் தான் சொல்கிறார்கள்.

இன்னார் மகன், இன்னார் மகள், இன்னாரை நான் உளப்பூர்வமாக விரும்புகின்றேன் என தமிழில் சொல்வது இருக்குது. நீங்க வேணும்னுனா போய் பாருங்க. அப்படி எல்லாம் மொழிகளிலும் உலகில் மனிதனால் பேசப்பட்டு இருக்கிறது. தமிழ் மட்டும்தான் இறைவனால் பேசப்பட்டிருக்கிறது.

கொங்கு தேர் வாழ்க்கை, அஞ்சறை தும்பித், காமம் செப்பாது – என்று செயலை எழுதி இறையனார் என்று கையெழுத்து இருக்கிறது, வேண்டுமென்றால் படியுங்கள். தமிழே எங்கள் இறையாக வந்திருக்கிறது, இறையனாரும்,எம்பெருமான் முருகன்வேலும், அகத்தியனும் கட்டிக்காத்த தமிழ் சமூகம்னு இருக்கிறது.

தமிழ் சங்கத்தின் தலைமக்களாக இருந்த என்னுடைய இறைக்கு முன்னால் என் தாய் மொழியில் வழிபாடு செய்ய முடியாது என்பது வரலாற்றில் எவ்வளவு பெரிய கொடுமை, துரோகம். அதனால் அதை மாற்றி அமைக்க போராடுவோம். இல்லை அதிகாரத்தை கைப்பற்றி மாற்றுவோம். அதை என் இறை முருக பெருமானின் மீது ஆணையிட்டு உறுதியளிக்கிறேன்.

Categories

Tech |