தென் கொரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்ற தவறான நம்பிக்கையால் வாய்க்குள் தீர்த்தம் தெளித்ததால் 46 பேருக்கு கொரானா வைரஸ் பரவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சியோலுக்கு தெற்கே உள்ள கியோங்கி மாகாணத்தில் உள்ள ரிவர் ஆஃப் கிரேஸ் கம்யூனிட்டி சர்ச்சில் மார்ச் 1 ம் தேதி சுமார் 100 கலந்து கொண்ட ஜெப கூட்டத்தில் “தெளிப்பானை கிருமி நீக்கம் செய்யாமல், மற்றவர்கள் வாயில் வைத்து தீர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிய மதபோதகர் மற்றும் அவரது மனைவி உட்பட 6 பேருக்கு மார்ச் 8 அன்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சென்றுள்ளனர். அப்போது அங்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கும் கரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து தேவாலயத்தின் உறுப்பினர்கள் 130 பேருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது அவர்களில் சுமார் 46 பேர் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் அந்த போதகர் சர்ச் உறுப்பினர்களுக்கு பெருமளவில் தொற்று ஏற்பட்டதற்கு தான் காரணமானதால் மன்னிப்பு கேட்டுள்ளார். கோவிட் -19 உடன் போராட உப்புநீர் தீர்த்தம் குடித்ததன் விளைவாக கொரானா பரவியதால் தேவாலயம் மூடப்பட்டது.