மெரினா படத்தில் நடித்த தென்னரசு குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் மெரினா.. இந்தப் படத்தில் துணை நடிகராக நடித்தவர் தான் தென்னரசு.. பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு தேடி வந்தார்.. வாய்ப்பும் கிடைக்கவில்லை.. இவர் மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் காதலித்து திருமணம் செய்துள்ளார்… இவர்களுக்கு 2 வயதில் குழந்தையும் உள்ளது..
இந்த நிலையில் தென்னரசு அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.. அதனைத்தொடர்ந்து இன்று வாக்குவாதம் முற்றிய நிலையில் தன்னுடைய மயிலாப்பூரில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் தென்னரசு.. தற்கொலை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், திரைத்துறையில் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருவதால் பிரபலங்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்..