Categories
மாநில செய்திகள்

குடிமராமத்து திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ. 498 கோடி ஒதுக்கீடு… முதல்வர் பழனிசாமி..!!

குடிமராமத்து திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ. 498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. குடிமராமத்து திட்டம் மூலம் 24,000 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நபார்டு வங்கி நிதியுதவியுடன் பல்வேறு நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி பிரச்சினையில் நல்ல தீர்வை பெற்று தந்தது அதிமுக அரசு என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

தற்போது, திருச்சியில் இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் செய்யப்பட்டு வருகின்றன என முதல்வர் பேட்டியளித்துள்ளார். முக்கியமாக, தொழில்முனைவோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மத்திய அரசிடம் கோரினோம். அந்த கோரிக்கையின் அடிப்படையில் 10 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, தொழில்துறையினரின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |