Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத மாநகரமானது சேலம்… சிகிச்சையில் இருந்த அனைவரும் டிஸ்சார்ஜ்!!

சேலம் தற்போது கொரோனா இல்லாத மாநகராட்சியாக மாறியுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியை சேர்ந்த 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 11 பேரும் குணமானதை தொடர்ந்து கொரோனா இல்லாத மாநகரமானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்றுவரை சேலம் மாவட்டத்தில் 35 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். அதில், 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று சேலம் மாநகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, சேலம் மாநகராட்சியில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 19 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று வரை 9,227 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,176 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொரோனவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று கோவை மற்றும் நாமக்கல் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |