ஒற்றைக்கால் இல்லாமல் தவித்து வந்த கோலா கரடிக்கு மருத்துவர்கள், நீண்டஆண்டு போராட்டத்திற்குப் பிறகு செயற்கை கால் பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.
உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் கோலா கரடி இனங்களும் ஒன்று. குடியிருப்பு,பயிர் செய்கை மற்றும் பண்ணை தொழில் போன்றவற்றுக்காக கோலா கரடிகள் வசிக்கும் நிலங்கள் அளிக்கப்படுவதாலும், ஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டு தீயினாலும் இந்த கோலா இனங்கள் அழிந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கால்நடை மருத்துவ செவிலியரான மார்லி கிறிஸ்டியன் என்பவர் வடக்கு நியூ சவுத் வேல்ஸில் ஒரு கோலா ஆபத்தில் இருப்பதை கண்டு அதனை மீட்டு காப்பாற்றியுள்ளார். அந்தக் கோலா ஒற்றை கால் இல்லாமல் தவித்து வந்தது. ஆகையால் கோலாவிற்கு செயற்கை கால் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அனால் இந்த முயற்சி பல முறை தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் அந்தக் கோலாவிற்கு தற்போது இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு செயற்கை காலை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். இந்த செயற்கை கால்களை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பல் மருத்துவர் உருவாக்கியுள்ளார். இப்போது அந்த கோலா கரடி நன்றாக மரங்களில் ஏறி, ஓடி, ஆடி விளையாடி வருகிறது.