Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீண்ட நாளாக கோரிக்கை… 20 கோடி ரூபாய் மதிப்புடையது… உடைத்தெறிந்த சூறாவளிக் காற்று…!!

மக்களின் கோரிக்கை அடிப்படையில் கட்டப்பட்ட குளிர்பதன கிடங்கு சூறாவளி காரணத்தால் தற்போது இடிந்து விழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகத அள்ளி பகுதிகளில் வாசிக்கும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையின் காரணமாக தற்போது 20, 00, 000 ரூபாய் மதிப்புடைய அரசு குளிர்பதன கிடங்கை கட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில் சென்ற 3 மாதத்திற்கு மேலாக கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் 15 அடி உயரமும் மற்றும் 200 அடி நீளமும் கொண்ட இந்த கட்டிட சுவர் கட்டப்பட்டிருந்த நிலையில் மாலை நேரத்தில் வீசிய சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் இக்கிடங்கின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து அந்நேரத்தில் பணிபுரிபவர்கள் யாரும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. மேலும் இந்தக் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது குளிர்பதன கிடங்கு கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |