Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு…. சிறப்பாக நடைபெற்ற ஆய்வு கூட்டம்…. ஆட்சியரின் தகவல்….!!

நீர்நிலைப் பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை நோட்டீஸ் வழங்கி அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தின் அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் இருக்கும் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு இருக்கின்ற குடியிருப்புகள், வணிக வளாக கட்டிடங்கள், விவசாய நிலங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றின் ஆவணங்களை சரிபார்த்து ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் எண்ணிக்கைகளின் விவரங்களை தமிழக அரசுக்கு அனுப்புவதற்கு ஒரு அறிக்கை தயார் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கும் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் இருக்கின்ற நபர்களின் எண்ணிக்கையை சேகரித்து ஒரு அறிக்கையை தயார் செய்து சமர்பிக்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது உறுதி என்று தெரியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலமாக நோட்டீஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |