திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக நாளை (27ஆம் தேதி) முதல் செப்டம்பர் 5 வரை திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.. கோயிலில் ஆவணித்திருவிழா ஆகம விதிப்படி பக்தர்கள் இன்றி பணியாளர்கள் மூலம் நடைபெறும் என்றும், ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை யூடியூப் வாயிலாக பக்தர்கள் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
ஆவணித் திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.